விருதுகள் இணைய முகப்பு - தமிழ்நாடு அரசு
 A+  A   A-   |  திரை வாசிப்பு மென்பொருள் | English

DR. A.P.J. அப்துல் கலாம் விருது

“இந்தியாவின் ஏவுகணை நாயகன்”, “அணுசக்தி நாயகன் மற்றும் தலைசிறந்த விஞ்ஞானி” என்றும், “திருக்குறள் வழி நடந்தவர்”, இளைஞர்களின் எழுச்சி நாயகன் என போற்றப்படும், பண்முகத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது தமிழக அரசால் “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது” வழங்கப்பட்டு வருகிறது. தகுதிகள் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு, அறிவியல் வளர்ச்சி, மனிதவியல் துறைகள் மற்றும் மாணாக்கர்களின் நலன்கள் ஆகியவற்றில் பாடுபட்டு சிறந்த சாதனை புரிபவருக்கு சுதந்திர தின விழாவின் போது “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது” 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.