புதியது அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் மற்றும் கோட்டை அமீர் ஆகிய விருதுகளுக்கான 2021 க்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்நாடு அரசு விருதுகளான துணிவு மற்றும் வீர தீரச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது, வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கபீர் விருது, கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை பொதுத் துறை கவனித்து வருகிறது. மேலும் மத்திய அரசின் விருதுகளான பத்ம விருதுகள், அசோக சக்ரா விருதுகள், ஜீவன் ரக்‌ஷ விருது மற்றும் காந்தியடிகள் அமைதி விருது ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பங்களை இத்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டுவருகின்றன.

தமிழ் நாடு அரசு விருதுகள்

...

துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான விருது

அண்ணா பதக்கம்

மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க வீர, தீரச் செயல் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு “துணிவு மற்றும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம்” என்ற விருதினை அரசு வழங்குகிறது.


மேலும் படிக்க

கல்பனா சாவ்லா விருது

தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட பெண்கள் துணிச்சலான மற்றும் வீர தீரச் சாகச் செயல் புரிந்தமைக்காக அவர்களை பாராட்டி அரசு துணிவு மற்றும் வீரதீரச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்குகிறது.

மேலும் படிக்க

மதநல்லிணக்க விருதுகள்

கபீர் விருது

தமிழ்நாட்டில் வசிக்கும் எந்தவொரு இந்தியக் குடிமகனுக்கும் (இராணுவப் படையின் உறுப்பினர்கள், காவல் துறை உறுப்பினர்கள், தீயணைப்புத்துறை உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரைத் தவிர்த்து) இவ்விருது வழங்கப்படும்.

மேலும் படிக்க

கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது மத நல்லிணக்க விருதினை மறைந்த கோட்டை அமீர் அவர்கள் பெயரால் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

மேலும் படிக்க