இந்திய அரசு விருதுகள்

பத்ம விருதுகள் - "விதிவிலக்கான மற்றும் புகழ் மிக்க சேவைக்காக வழங்கப்படுவது" .

பத்ம விபூஷண் விருது
இவ்விருது இந்தியக் குடியரசின் இரண்டாவது மிக உயர்ந்த விருதாகும். இவ்விருது “விதிவிலக்கான மற்றும் புகழ் மிக்க சேவைக்காக” வழங்கப்படுகிறது....மேலும் படிக்க

பத்ம பூஷண் விருது
இவ்விருது இந்தியக் குடியரசின் மூன்றாவது மிக உயர்ந்த விருதாகும். இவ்விருது ஒரு தனிநபர் தான் சார்ந்த எந்த வொரு துறையிலும் மிகச்சிறந்து விளங்கினால் அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது....மேலும் படிக்க

பத்ம ஸ்ரீ விருது
இவ்விருது இந்தியக் குடியிரசின் நான்காவது மிக உயர்ந்த விருதாகும். இவ்விருது ஒருவரது சிறப்பான சேவைக்காக ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறது.... மேலும் படிக்க
துணிச்சலான செயல்களுக்கான விருதுகள் - உயிரைக் காப்பதில் தைரியமாகவும் துணிச்சலாகவும் செயல்படுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்
மீட்பவர் தனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்த போதிலும் அவர் மற்றவருடைய உயிர் மற்றும் சொத்துக்களை காப்பதில் மனவலிமையுடன் செயல்பட்டிருந்தால் இவ்விருது வழங்கப்படுகிறது.... மேலும் படிக்க

ஜீவன் ரக்ஷா பதக்
மற்றவருடைய உயிர் மற்றும் சொத்துக்களைக் காக்கும் நடவடிக்கையில் தைரியமாகவும் மனவலிமையுடனும் ஈடுபடும் போது கடும் உடல் காயம் ஏற்பட்டவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
... மேலும் படிக்க

அசோக் சக்ரா
போரில்லாத அமைதிக்காலத்தில் ஒருவருக்கு அவரது வீரம், தைரியம் மற்றும் சுய தியாக நடவடிக்கைக்காக வழங்கப்படும் விருதாகும். இது அமைதிக் காலத்தில் வழங்கப்படும் பரம் வீர் சக்ராவிற்கு இணையான விருதாகும்....மேலும் படிக்க

கீர்த்தி சக்ரா
இவ்விருது போர்க்களத்திற்கப்பால் ஒருவர் புரியும் வீரதீர, துணிச்சலான செயல்கள் அல்லது உயிர் தியாகத்திற்காக வழங்கப்படுகிறது. இவ்விருது பொதுமக்கள், இராணுவ வீரர்கள் மற்றும் ஒருவரது வீரதீர செயலுக்காக அவரது மரணத்திற்குப் பின்னரும் வழங்கப்பட்டு வருகிறது.... மேலும் படிக்க

சவுரிய சக்ரா
இவ்விருது ஒருவர் நேரடியாக எதிரியுடன் போரிடாமல் அவர் புரிந்த விரதீர, தைரியமான செயல்கள் அல்லது உயிர் தியாகத்திற்காக வழங்கப்படுகிறது. இவ்விருது பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ... மேலும் படிக்க
இதர விருதுகள்

கபீர் புரஸ்கார்
இவ்விருதானது, ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.... மேலும் படிக்க

அமைதிக்கான காந்தி விருது
அஹிம்சை மற்றும் பிற காந்திய வழிகள் மூலம் சமூக, பெருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்காக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் பங்களிப்புகளுக்காக அவர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.... மேலும் படிக்க