Increase text size Normal text size Decrease text size திரை வாசிப்பு மென்பொருள் | முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க

பயன்பாட்டுவிதிமுறைகள்

தமிழ் நாடு அரசின் இந்த விருதுகளுக்கான வலை இணையதளத்தை பொதுத் துறை முதன்மை துறையாக நிர்வகித்து வருகிறது. இந்த விருதுகள் வலை இணையதளத்தையே பிற துறைகளும் தங்கள் துறையில் வழங்கப்படும் அரசு விருதுகள் குறித்த தகவல்களைப் பரப்புவதற்கு பயன்படுத்துகின்றன. இந்த வலை இணையதளம் தமிழ்நாடு தேசிய தகவல் மையத்தால் பொதுத்துறையை பிரதானமாக கலந்தாலோசித்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொடுக்கப்பட்டள்ள தகவல்களின் உள்ளடக்கத்திற்கான உரிமை மற்றும் பராமரிப்பு சம்பந்தப்பட்ட துறைகளையே சாரும்.
இந்த வலை இணையதளத்தின் சேவைப் பயன்பாட்டு விதிமுறை மற்றும் தனியுரிமைக் கொள்கைகள் ஆகியவற்றினை பூர்த்தி செய்யாத பட்சத்தில், அது குறித்து இந்த வலை இணையதளத்தில் - எங்களைத் தொடர்பு கொள்ள- என்ற இணைப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலம் கணினி நிர்வாகியின் கவனத்திற்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டால், அவ்வாறு விதிகளை மீறிய பயனாளர் உடனடியாக தடுக்கப்படுவதுடன் பெறப்பட்ட விபரங்களைச் சரிபார்த்த பிறகு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அந்த விதி மீறிய பயனாளருக்கான இந்த வலை இணையதளத்தை பயன்படுத்தும் உரிமைகள் நிறுத்தப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வலை இணையதளத்தை பயன்படுத்துவதாலோ அல்லது பயன்படுத்தாதலோ ஏற்படும் எந்தவிதமான செலவு, இழப்பு அல்லது சேதம் மற்றும் மறைமுகமாக அல்லது அதன் விளைவாக ஏற்படும் எந்தவொரு வரம்பில்லா செலவு, இழப்பு மற்றும் சேதங்களையும் உள்ளடக்கி, அல்லது தரவு பயன்பாடு செலவு, இழப்பு அல்லது சேதம் ஆகிவற்றுக்கு இந்நிறுவனம் / துறை அல்லது தேசிய தகவல் மையம் பொறுப்பேற்காது.
இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இந்திய சட்டங்களின்படி நிர்வகிக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் எழும் எந்தவொரு சர்ச்சையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் பிரத்தியேக அதிகார வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும்.

பதிப்புரிமை கொள்கை

இந்த வலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் முதன்மையாக தமிழ்நாடு அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சொந்தமானவையாகும். இந்த வலை இணையதளத்தில் இடம்பெறும் பொருள் குறித்து சம்பந்தப்பட்ட துறையிலிருந்து எழுத்துப்பூர்வமாக முறையான அனுமதியைப் பெற்ற பிறகு இலவசமாக மீள் உருவாக்கம் செய்யப்படலாம். இருப்பினும், உள்ளடக்கம் துறையால் வழங்கப்படும் வழிகாட்டுதல்படி துல்லியமாக மீள் உருவாக்கம் செய்யப்பட வேண்டுமேயன்றி, அவதூறான முறையில் அல்லது தவறான சூழலில் பயன்படுத்தப்படக்கூடாது. இவ்விணைய வழியில் மற்றவர்களுக்கு என்னவிதமான தகவல்களை வழங்கினாலோ அல்லது வெளியிட்டாலோ அதன் மூலப்பொருள் முறையான ஒப்புதல் பெற்றதாக இருக்க வேண்டும். மீள் உருவாக்கம் செய்ய அனுமதிக்கப்பட்ட பொருள் மூன்றாம் தரப்பினரின் பதிப்புரிமை எனக் கண்டறியப்பட்டதாக இருக்கக்கூடாது. அத்தகைய ஆவணங்களைப் மீள் உருவாக்கம் செய்ய சம்பந்தப்பட்ட துறைகள் / பதிப்புரிமையாளர்களின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்க வேண்டும்

தனியுரிமைக்கொள்கை

இந்த வலை இணையதளம் உங்களிடமிருந்து எந்தவொரு குறிப்பிட்ட தன் விபரங்களையும் (பெயர், தொலைபேசிஎண் அல்லது மின்னஞ்சல் முகவரி போன்றவை) உங்கள் அனுமதியின்றி தானாகவே எடுத்துக்கொள்ளாது. இது உங்களை தனித்தனியாக அடையாளம் காண எங்களை அனுமதிக்கிறது. பதிவு அல்லது பிற செயல்பாடுகளுக்காக இந்த வலை இணையதளத்தில் கோரப்படும் தங்களுடைய சுய விபரங்கள் எந்த காரணத்திற்காக கோரப்படுகிறது என்பது தங்களுக்கு தெரிவிக்கப்படும் மேலும் அத்தகவல்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த வலை இணையதளத்தில் தானாக முன்வந்து வழங்கிய தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்த தகவலையும் எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் (பொது/ தனியார்) நாங்கள் விற்கவோ பகிர்ந்துகொள்ளவோ மாட்டோம். இந்த வலை இணையதளத்தில் வழங்கப்பட்ட எந்த தகவலும் இழப்பு, தவறான பயன்பாடு, அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது வெளிப்படுத்துதல், மாற்றம் மற்றும் சேதம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படும்.
இந்த வலை இணையதளத்தை பயன்படுத்தும் பயனாளரின் இணையநெறிமுறை முகவரிகள் (ஐபி அட்ரஸ்), டொமைன்பெயர், உலாவிவகை, இயக்கமுறைமை, வருகையின் தேதி மற்றும் நேரம் மற்றும் பார்வையிட்ட பக்கங்கள் போன்ற சில தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். இத்தளத்தை சேதப்படுத்தும் முயற்சி கண்டறியப்பட்டலோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட கோரிக்கையும் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெறப்பட்டாலோ அன்றி இந்த வலை இணைய தளத்தை பார்வையிடும் நபரின் அடையாளத்துடன் இந்த முகவரிகளை இணைக்க நாங்கள் எந்த முயற்சியும் எடுக்க மாட்டோம்.

ஹைப்பர்லிங்கிங் கொள்கை

i. வெளிப்புற வலைத்தளங்கள் / இணையதளங்களுக்கான இணைப்புகள்
இந்த வலை இணையதளத்தின் பல இடங்களில், பிற வலைத்தளங்கள் / இணைய தளங்களுக்கான இணைப்புகளை நீங்கள் காணலாம். இந்த இணைப்புகள் கவனமாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இங்கு வைக்கப்பட்டுள்ளன. பயனாளர் வசதிக்காக இந்த இணைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இணைக்கப்பட்ட வலைத்தளங்களின் உள்ளடக்கங்கள் மற்றும் நம்பகத்தன்மைக்கு தேசிய தகவல் மையம் அல்லது இதிலுள்ள துறைகள் பொறுப்பல்ல, அவற்றில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை நாங்கள் அங்கீகரித்துள்ளதாக கருதக்கூடாது. இந்த வலை இணையதளத்தில் இதர இணைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளதால் அவைகளை நாங்கள் ஒப்புக்கொள்ளவதாகக் கருதக்கூடாது. இந்த இணைப்புகள் எல்லா நேரத்திலும் செயல்படும் என்பதற்கு எங்களால் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது, மேலும் இணைக்கப்பட்ட பக்கங்கள் கிடைப்பதில் எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
ii. பிற வலைத்தளங்களில் இந்த விருது வலை இணையதளத்திற்கான போர்ட்டலுக்கான இணைப்புகள் இந்த விருதுகள் வலை இணையதளத்தில் வழங்கப்பட்ட தகவலுடன் நீங்கள் நேரடியாக இணைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை, அதற்கான முன் அனுமதி தேவையில்லை. எவ்வாறாயினும், இந்த வலை இணையதளத்தில் வழங்கப்பட்ட இணைப்புகள் குறித்து நீங்கள் எங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம், இதன்மூலம் ஏதேனும் மாற்றங்கள் அல்லது அதில் புதுப்பித்தல் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும். மேலும், எங்கள் தளங்களை உங்கள் தளத்தில் பிரேம்களில் ஏற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த வலை இணையதளத்திற்கான சொந்தமான பக்கங்கள் பயனரின் புதிதாக திறக்கப்பட்ட உலாவி சாளரத்தில் ஏற்றப்பட வேண்டும்.

பொறுப்புத் துறப்பு

இந்த வலை இணையத்தளத்தின் உள்ளடக்கங்கள் பொதுமக்கள் எளிதாகவும் விரைவாகவும் அறிந்துகொள்ளத்தக்க வகையில் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். இருப்பினும், தொலைபேசி எண்கள், ஒரு பதவியை வைத்திருக்கும் அதிகாரியின் பெயர் போன்ற விவரங்கள் இந்த வலை இணையதளத்தில் புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு மாறக்கூடும். எனவே, இந்த வலைத் தளத்தில் வழங்கப்பட்ட உள்ளடக்கங்களின் முழுமை, துல்லியம் அல்லது பயன் குறித்து எந்தவொரு சட்டப் பொறுப்பையும் நாங்கள் ஏற்க இயலாது.இந்த வலை இணையதளத்தின் உள்ளடக்கத்தை மொழிபெயர்க்க எந்த தானியங்கி மொழிபெயர்ப்பு கருவியையும் பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை.